Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு எதிராக சாதனை சதம் விளாசிய இருவர்

 இலங்கைக்கு எதிராக சாதனை சதம் விளாசிய இருவர்

30 கார்த்திகை 2024 சனி 08:20 | பார்வைகள் : 1356


இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்டப்ஸ் மற்றும் பவுமா சதம் விளாசினர். 

தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 191 ஓட்டங்களும், இலங்கை 42 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 89 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 

அப்போது ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) மற்றும் டெம்பா பவுமா (Temba Bavuma) இருவரும் கூட்டணி அமைத்தனர். 

அபார ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஸ்டப்ஸ் சதம் அடித்தார். இதன்மூலம் 6 ஆண்டுகளில் டர்பனில் சதம் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார். 

பின்னர் அணித்தலைவர் பவுமாவும் சதம் விளாசினார். இது அவருக்கு 3வது டெஸ்ட் சதம் ஆகும்.

அத்துடன் இலங்கைக்கு எதிராக சதம் அடித்த 3வது தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் என்ற சாதனையை செய்தார். 

இதற்கு முன்பு ஷான் பொல்லாக் (111) மற்றும் ஹசிம் ஆம்லா (139) ஆகியோர் மட்டுமே சதம் அடித்திருந்தனர்.