மீண்டும் தனுஷை தாக்கி பேசினாரா நயன்தாரா..?

30 கார்த்திகை 2024 சனி 14:40 | பார்வைகள் : 2632
’பொய்கள் மூலமாக அடுத்தவர் வாழ்க்கையை அழிக்க நினைத்தால், அது கடன் பெற்றது போல வட்டியுடன் உங்களை வந்தடையும்' என்ற பழமொழியை நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், இந்த வீடியோவில் 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தன்னுடைய அனுமதி இன்றி காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், ₹10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவுக்கு பதில் மனு அளித்துள்ள நயன்தாரா, ’நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தவில்லை என்றும், படப்பிடிப்பின் போது எடுத்த சில காட்சிகளை தான் பயன்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை விரைவில் மீண்டும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா தனது ஸ்டோரியில், "பொய்கள் மூலமாக அடுத்தவர் வாழ்க்கையை அழிக்க நினைத்தால், அது கடன் பெற்றது போல் வட்டியுடன் உங்களை திரும்ப வந்து அடையும்" என்ற பழமொழியை பகிர்ந்துள்ளார்.
இந்த பழமொழி மூலம் அவர் யாருக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்ற விவாதங்களை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.