80 மில்லியனை எட்டிய தெலிதோன்!!
1 மார்கழி 2024 ஞாயிறு 08:29 | பார்வைகள் : 1308
அரிதான மரபணு நோய்களிற்கு எதிரான ஆராய்ச்சிகளிற்கு வழங்கப்படும் நிதிக்காக, வருடாவருடம் நடாத்தப்படும் மிகப் பிரமாண்டமான தெலிதோன் (Téléthon) நிகழ்வில், இந்த வருடம், முன்னரே கணித்தபடி கிட்டத்தட்ட 80 மில்லியன் ( 79.801.520) யூரோக்கள் கேரிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக 37 வருடங்களாக நடக்கும் இந்த பொது நோக்கு நிகழ்வில், பிரபலமான நட்சத்திரங்கள், பாடகர்கள் எனக் கலந்து நிகழ்வுகளையும் நடாத்தியிருந்தனர்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்தப்பட்ட தெலிதோன் நிகழ்வில் அதியுச்சத் தொகையான 93 மில்லியன் யூரோக்கள் நிதியாகச் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.