புதிய மகிழுந்துக் கொள்வனவிற்கான உதவி நிறுத்தம்!!
1 மார்கழி 2024 ஞாயிறு 09:17 | பார்வைகள் : 1990
டீசல் மற்றும் பெற்றோல் வாகனங்களில் இருந்து, «சுத்தமான» (propre), மின் வாகனங்கள் அல்லது Hybride வாகனங்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்க, அரசாங்கம் 9.000 யூரேக்கள் வரை வழங்கி வந்தது.
இது கொள்வனவு செய்பவரின் ஊதியத்தொகை அடிப்படையில் கணக்கிட்டு வழங்கப்பட்டு வந்தது.
இன்று டிசம்பர் 1ம் திகதி முதல் இந்த ஊக்கத்தொகை முற்றாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை இனிமேல் வழங்கப்பட மாட்டாது.
இதுவரை இந்த ஊக்கத்தொகை முக்கியமாக இல்-து-பிரான்சில் Seine-et-Marne (77), Yvelines (78), Essonne (91) Val-d’Oise (95), Argenteuil, Athis-Mons, Juvisy-sur-Orge, Morangis, Paray-Vieille-Poste, Savigny-sur-Orge, Viry-Châtillon ஆகிய பகுதிகளிற்கு வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.