Paristamil Navigation Paristamil advert login

விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு..

 விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு..

1 மார்கழி 2024 ஞாயிறு 09:22 | பார்வைகள் : 1815


இயக்குனர் விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு காரணமாக நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கராஜன் நடித்து வரும் 'எல்.ஐ.கே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் ’நானும் ரவுடிதான்’ படத்தின் சில காட்சிகள் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட மூன்று பக்க அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்காக காரசாரமான கருத்துகள் பதிவாகி வந்தன.

இந்நிலையில் திடீரென, விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் கணக்கை டி-ஆக்டிவேட் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. எனினும், தனுஷ் குறித்து அவர் பதிவு செய்த கருத்துகளுக்கு பதிவான கமெண்ட்கள் சர்ச்சைக்குரியதாக இருந்ததால், அவர் தனது ட்விட்டர் கணக்கை டி-ஆக்டிவேட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்