பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவரா ?
1 மார்கழி 2024 ஞாயிறு 09:26 | பார்வைகள் : 502
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை பிரபல நடிகர் விஜய் சேதுபதி கடந்த 50 நாட்களைக் கடந்து மிக சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில், இந்த முறை அவருடைய திரைப்பட பணிகளின் காரணமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என்று 18 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது தன்னுடைய 58வது நாளில் பயணித்து வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் முதல் ஆளாக நுழைந்த பிரபல தயாரிப்பாளரும் சினிமா திரைப்பட விமர்சிகரமான ரவீந்தர் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதலில் வெளியேறினார். அவரை தொடர்ந்து நடிகர் அர்னவ், நடிகை தர்ஷா, நடிகை சுனிதா, நடிகை ரியா, நடிகை வர்ஷினி உள்ளிட்டவர்கள் இந்த ஆறு வார காலத்தில் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 28வது நாளில் ஆறு புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
இதில் ரியா தியாகராஜன், ரானவ், வர்ஷினி வெங்கட், மஞ்சேரி நாராயணன், ராயன் மற்றும் பிரபல நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமார் உள்ளிட்டவர்கள் அடங்குவர். பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய ஆறாவது வாரத்தை கடந்து இப்போது ஏழாவது வாரத்தில் பயணித்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட உள்ள போட்டியாளர் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி Bigg Boss Tamil Season 8 நிகழ்ச்சியில் 28வது நாளில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த ஆறு போட்டியாளர்களின் ஒருவரான சிவகுமார் தான் இந்த வார எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாள்களாகவே அவர் பெரிய அளவில் எந்த டாஸ்க்கிலும் செயல்படவில்லை என்று மக்கள் எண்ணிய நிலையில், அவர் இந்த வாரம் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.