திபெத்தியதிபெத்திய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 53 பேர் பலி
7 தை 2025 செவ்வாய் 08:36 | பார்வைகள் : 645
எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள திபெத்திய பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 53 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவிலும் செவ்வாய்கிழமை விடியற்காலையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உள்ள லோபுச்சே என்ற இடத்தில் இருந்து 57 மைல் தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்திலும் 4.5 ரிக்டர் அளவில் அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், இதுவரை 53 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் ஒரு மாவட்டத்தில் மட்டும் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் இமயமலையின் மையப்பகுதிக்கு அருகில் அடைய முடியாத பகுதிகளில் கிராமங்கள் மற்றும் வீடுகள் அமைந்துள்ளதால், அவை மொத்தமாக சேதமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
கடந்த 2015ல், நேபாளத்தைத் தாக்கிய 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புமோரியில் இருந்து பாரிய பனிச்சரிவைத் தூண்டியது. இதனால் எவரெஸ்ட் சிகத்தில் அமைந்துள்ள முகாம் ஒன்று பனியால் புதைந்து போனதால், குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.
குறைந்தது 61 பேர் காயங்களுடன் தப்பியிருந்தனர். இன்றும் எவரெஸ்ட் சிகத்தில் நடந்த மிகப்பெரிய பேரழிவு சம்பவம் இதுவென்றே கூறப்படுகிறது.