'கங்குவா'.ஆஸ்கார் விருது பட்டியலில்
7 தை 2025 செவ்வாய் 09:36 | பார்வைகள் : 341
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்கள் ஆதரவை பெறாததால், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இந்த படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இணைந்துள்ளதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் உலகம் முழுவதிலும் இருந்து 323 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ‘கங்குவா’ திரைப்படமும் ஒன்று.
இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். ஒருசிலர், இந்த படத்திற்கு சிறந்த படம் அல்லது சிறந்த சவுண்ட் எபெக்ட் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர். ‘கங்குவா’ திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை என்றாலும், இந்த படம் விருது வாங்கி படக்குழுவினர்களை மகிழ்விக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.