'கூலி' அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்..!
7 தை 2025 செவ்வாய் 13:13 | பார்வைகள் : 597
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது ’கூலி’ படத்தின் அப்டேட்டை கூறினார். ஆனால் அதே நேரத்தில் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என்று கடிந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தாய்லாந்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு 13ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பாங்கில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த கேள்விக்கு ’அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே பலமுறை உங்களுக்கு தெரிவித்து விட்டேன்’ என்று கடிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.