Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : இரு பேருந்து சாரதிகள் மீது துப்பாக்கிச்சூடு!!

பரிஸ் : இரு பேருந்து சாரதிகள் மீது துப்பாக்கிச்சூடு!!

9 தை 2025 வியாழன் 05:50 | பார்வைகள் : 1171


பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் வைத்து இரு பேருந்து சாரதிகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 8, நேற்று புதன்கிழமை மாலை 7.45 மணி அளவில் Bois de Boulogne பகுதியில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Avenue de l'Hippodrome வீதியில் உள்ள தரிப்பிடம் ஒன்றினை வந்தடைந்த 70 ஆம் இலக்க பேருந்து சாரதி நோக்கி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. பேருந்தின் கண்ணாடி உடைந்து நொருங்கியுள்ளது. அதிஷ்ட்டவசமாக அதில் எவரும் காயமடையவில்லை.

இச்சம்பவத்தின் பின்னர் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அதே 70 ஆம் இலக்க மற்றொரு பேருந்து நோக்கியும் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. அதிலும் எவரும் காயமடையவில்லை.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பேருந்து ஜனவரி 13 ஆம் திகதி வரை இயக்கப்படமாட்டாது என RATP அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்