Paristamil Navigation Paristamil advert login

நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம்!

நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம்!

10 தை 2025 வெள்ளி 17:19 | பார்வைகள் : 306


நாம் தமிழர் கட்சியை மாநிலக்கட்சியாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக அரசியலில் எந்த கட்சியுடனும் கூட்டணியின்றி தேர்தல் களத்தை நாம் தமிழர் கட்சி சந்தித்து வருகிறது. திராவிட கட்சிகளுக்கு எதிராக தமது வலுவான பிரசாரத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து முன் வைத்து வருகிறார்.

தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை கண்டு வந்த நாம் தமிழர் கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் 8.22 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந் நிலையில், நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அதிகாரப்பூர்வமாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து அதுதொடர்பான கடிதத்தையும் அனுப்பி உள்ளது.

இந்த விவரம் நாம் தமிழர் கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் நாம் தமிழர் கேட்டிருந்த விவசாயி நிலத்தில் உழவு செய்யும் விவசாயி, புலி சின்னங்களை தர முடியாது என்று அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது.

தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்