பரிஸ் : காவல்துறையினர் மீது கத்திகுத்து தாக்குதல்.. ஒருவர் கைது!
10 தை 2025 வெள்ளி 17:26 | பார்வைகள் : 1868
காவல்துறையினர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று ஜனவரி 09, வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Simplon மெற்றோ நிலையத்துக்கு அருகே, மாலை 6.45 மணி அளவில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனர்.
அதன்போது ஆக்ரோஷமான நடந்துகொண்ட அவர், மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றை உருவி எடுத்து, காவல்துறையினரை தாக்கியுள்ளார்.
சுகாகரித்துக்கொண்ட காவல்துறையினர், மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியால் குறித்த நபரைச் சுட்டனர்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் உளநல சிகிச்சை பெறுபவர் என தெரிவிக்கப்படுகிறது.