நான்கு ஆண்டு தடையின் பின்னர் பரிசை வந்தடைந்தது பாக்கிஸ்தான் விமானம்!
10 தை 2025 வெள்ளி 18:10 | பார்வைகள் : 994
PIA எனப்படும் பாக்கிஸ்தானின் சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, நான்கு ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானின் குறித்த விமான சேவைக்கு ஐரோப்பா முழுவதும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை அடுத்து ஐரோப்ப்பிய வானில் குறித்த விமானம் பறக்கவோ, ஐரோப்பிய விமான நிலையங்களில் தரையிறக்கவே கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நான் கு ஆண்டுகள் இந்த தடையின் பின்னர், இன்று வெள்ளிக்கிழமை பாக்கிஸ்தானின் தலைநகர் இஸ்லாபாத் நகரில் இருந்து உள்ளூர் நேரம் காலை 8.40 மணிக்கு புறப்பட்டது.
அதை அடுத்த்த்து சாள்-து-கோல் விமான நிலையத்தில் நண்பகல் 12.40 மணிக்கு விமானம் தரையிறங்கியது.