'தளபதி 69' திரைப்படம் ’பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் படமா?
12 தை 2025 ஞாயிறு 13:58 | பார்வைகள் : 4382
தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 69ஆவது திரைப்படத்தை எச் வினோத் இயக்கி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் VTV கணேஷ், ’தளபதி 69’ திரைப்படம், பாலையா நடித்த ’பகவந்த் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் அனில்ரவிப்புடி இயக்கிய ’சங்கராந்திக்கு வாஸ்துனம்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் VTV கணேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில், அனில் ரவிபுடி, குறித்து மிக உயர்வாக பேசினார்.
மேலும், ’பகவந்த் கேசரி படத்தை விஜய் ஐந்து முறை பார்த்ததாகவும், அந்த படம் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் அவர் அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியதாகவும், அனில் ரவிபுடி இந்த ரீமேக் படத்தை இயக்க வேண்டும் என்று விஜய் கேட்டதாகவும் கூறினார். ஆனால், அதே மேடையில் இருந்த அனில் ரவிபுடி, அதை மறுத்தார். மேலும் VTV கணேஷிடம் இது பற்றி பேச வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான்; அவர் மிக நல்ல மனிதர். ஒரு முறை சந்தித்தாலே அவரின் பெருமை புரியும். விஜய் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அது ரீமேக் படமா? இல்லையா? என்பதை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறினார்.
இதை அடுத்து, விஜய் நடித்து வருவது ’பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan