Paristamil Navigation Paristamil advert login

'உலகத் தமிழ் சாதனையாளர்' பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர். நவரத்தினம் கணேஸ்வரன்

'உலகத் தமிழ் சாதனையாளர்' பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர். நவரத்தினம் கணேஸ்வரன்

13 தை 2025 திங்கள் 17:55 | பார்வைகள் : 1200


புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தன் தாய் மொழியில் தாகம் கொண்டவராய். தமிழ் மொழியை தன்னுயிராய் நேசித்தவராய் வாழும் ஈழத் தமிழரான திருமிகு. நவரத்தினம் கணேஸ்வரன் (எழில்). இந்த பிரான்ஸ் மண்ணில் தமிழுக்காய் நீண்ட சேவையை செய்து வருபவர். பிரான்ஸ் மண்ணைத் தாண்டி தமிழ் உலகுக்கு நன்கு அறியப்பட்டவர்.

அவரின் சேவைகளை பாராட்டி 'முத்தமிழ் வித்தகர்' தமிழ் சிந்தனையாளர்' 'முத்தமிழ் காவலர்' இலக்கிய தமிழ் வித்தகர்' சமூக ஆர்வலர்' 'திருப்பணி செம்மல்' என பல விருதுகளை உலகத்தமிழ் அறிஞர்கள் இவருக்கு வழங்கி மதிப்பளித்து உள்ளனர்.

தமிழாய், தமிழுக்காய், தன் வாழ்நாளை வழங்கி வாழும் திருமிகு. நவரத்தினம் கணேஸ்வரன் (எழில்). அவர்களை உலக தமிழ் சங்கம், சென்னை தமிழ் சங்கம், மலேசியா தமிழ் சங்கம், என்பன கூட்டமாக மலேசியாவில் நடத்திய 2024-2025 'முத்தமிழ் ஐம்பெரும் விழாவில்' அரசியல் பிரமுகர்கள், நீதியரசர்கள், உயர் ஸ்தானியர்கள், தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் 'உலகத் தமிழ் சாதனையாளர்' எனும் உயர்ந்த விருதினை வழங்கி மதிப்பளித்து உள்ளனர்.

பிரான்சில் இருந்து மலேசியாவரை சென்று வித்தகர்கள், அறிஞர்கள் மத்தியில் 'உலகத் தமிழ் சாதனையாளர்' விருது பெற்று மதிப்பளிக்கப்பட்ட திருமிகு. நவரத்தினம் கணேஸ்வரன் (எழில்) அவர்களை paristamil. Com தங்கள் வாசகர்கள், விளம்பரதாரர்கள், அன்பர்கள், அனைவருடனும் இணைந்து வாழ்த்தி மகிழ்கிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்