மாரடைப்பு தரும் ஆண் ஹார்மோன்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9598
ஆண் ஹார்மோன்கள் ஆணுக்கு சிறப்பான வலிமைகளை தருகின்றன. வலிமை மிக்க உடல் வளமும் தொடர்ந்து நீண்ட காலம் வரை இனப்பெருக்கம் செய்யக்கூடிய சக்தியும் ஆண்களுக்கு மட்டுமே உள்ள இரண்டு பெரிய பலம் ஆகும்.
இத்திறன்கள் பெண்களுக்கு இல்லை தான். ஆனாலும் குறைந்த ஆயுளும் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்திக் குறையும் ஆண்களின் இரண்டு பெரிய பலவீனங்கள். டெஸ்டிரோஜன் என்ற மிகச் சக்தியுடைய ஆண் ஹார்மோன் உடலுக்கு நல்ல வலிமையை கொடுத்து இதயத்துக்கு வந்து போகும் அனைத்து ரத்த குழாய்களிலும் அடைப்பினை ஏற்படுத்தும் ஒரு பொருளை உண்டாக்கி விடுகிறது.
எச். டி. எல். என்கிற அதிகத் திறனுடைய லிப்போ புரதம் கொழுப்பு பொருட்களைக் கட்டுப்படுத்தி ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து கல்லீரலையும் நல்லநிலையில் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
மனித ரத்தத்தில் இந்த லிப்போ புரதத்தை உண்டாக்க உதவும் தூண்டு சக்தி இந்த டெஸ்டிரோஜனுக்கு இல்லை. மாறாக இந்த திறமை பெண் ஹார்மோனாகிய ஈஸ்டிரோஜனுக்கு தான் உண்டு. இதனால் தான் மாரடைப்பு என்ற பேரிழப்பு ஆண்களுக்கே அதிகம் ஏற்படுகின்றது.
அதிக ரத்த அழுத்ததமும, கொலஸ்ட்ரால் கொழுப்புகளால் மாரடைப்பு பெண்களிடம் மிகவும் குறைவு. உடல் வலிமை வேறு. உடலின் எதிர்ப்பு சக்தி வேறு என்பதாகும். வலிமை இயற்கையாகவே ஆண்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பெண்களுக்கும் தரப்பட்டு விட்ட வரப்பிரசாதமாகும்.
தற்போது உடல் உழைப்பு குறைந்து விட்ட காரணத்தால் கொழுப்பு சக்தி அதிகமாக உடலில் சேர்ந்து மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகமடைந்துள்ளது. அதனால் தான் பஸ் ஓட்டும் போதே மாரடைப்பால் இறந்து விடும் டிரைவர்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி படிக்கிறோம்.
மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இயற்கையாகவே ஆண்களுக்கு அதிகம் இருக்கிறது. இதை சரி செய்ய தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலை உணவை எந்த காரணம் கொண்டும் தவிர்க்க கூடாது. இவை ஒரளவு மாரடைப்பில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.