தலைமுடி பாதுகாப்பிற்கு சில எளிய குறிப்புகள்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9419
• வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தடவி ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லது.
• ஈரமான தலைமுடியை நேராக ‘ட்ரையர்’ என்ற கருவி போட்டு காய வைக்க கூடாது.
• தலைமுடியை நன்றாகத் துவாலையால் துடைத்து விட்டு ‘ட்ரையர்’ போட்டு காய வைக்கலாம்.
• தலைமுடிக்கு பயன்படுத்தும் ஹேர் ஆயில், ஷாம்பூ, முதலியவற்றை அடிக்கடி மாற்றக் கூடாது.
• ஒருவர் உபயோகித்த சீப்பு துவாலையை மற்றவர் உபயோகிக்க கூடாது.
• தலைமுடி நுனியில் அல்லது மேல்புறம் ப்ளாஸ்டிக் ரப்பர் பாண்ட், ப்ளாஸ்டிக் ஹெட்பாண்ட் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
• வெயிலில் போகும் போது தலைமுடியை வெயில் படாமலிருக்கும்படி கவனமாக குடை அல்லது தொப்பி ‘ஸ்கார்ப்’ பயன்படுத்திப் பாதுகாக்கவும்.