Paristamil Navigation Paristamil advert login

செனட் சபையில் Élisabeth Borne.. பாராளுமன்றத்தில் பிரதமர்.. பொது கொள்கை விளக்க உரை வாசிக்கின்றனர்!

செனட் சபையில் Élisabeth Borne.. பாராளுமன்றத்தில் பிரதமர்.. பொது கொள்கை விளக்க உரை வாசிக்கின்றனர்!

13 தை 2025 திங்கள் 18:01 | பார்வைகள் : 1330


நாளை ஜனவரி 14 ஆம் திகதி அரசியல் களத்தில் மிக முக்கியமான நாள். பிரான்சுவா பெய்ரூ பிரதமராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் நாளை அவரது பொது கொள்ளை விளக்க உரையை பாராளுமன்றத்தில் வாசிக்க உள்ளார். அதேவேளை, முன்னாள் பிரதமரும், தற்போதைய கல்வி அமைச்சருமான Élisabeth Borne, செனட் மேற்சபையில் அதனை வாக்கிறார்.

ஒரே அறிக்கையை இரண்டு வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு இடங்களில் வாசிக்கின்றனர். பெரும்பான்மை இல்லாத பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம், 49.3 அரசியலமைப்பை பயன்படுத்தி வாக்கெடுப்பு இன்று அதனை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரதமராக பதவியேற்ற போது எலிசபெத் பேர்ன் தனது பொது கொள்ளை விளக்க உரையினை வாசித்திருந்தார். அதேபோன்று நாளை செனட் சபையிலும் வாசிக்க உள்ளார்.

ஜனவரி 14, நாளை செவ்வாய்க்கிழமை இரு வாசிப்புகளும் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்