இரு மாவட்டங்களில் வீதி வேகக்கட்டுப்பாடு!!
13 தை 2025 திங்கள் 18:56 | பார்வைகள் : 1178
சுற்றுச்சூழல் மாசடைவு அதிகரித்துள்ளதை அடுத்து, நாட்டின் வடக்கு மாவட்டங்கள் இரண்டில் வீதி வேகக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
Nord மற்றும் Pas-de-Calais ஆகிய இரு மாவட்டங்களுக்கே இந்த வேகக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்விரு மாவட்டங்களிலும் அண்மைய நாட்களில் அதிகளவான வளிமண்டல மாசடைவு பதிவாகி வருகிறது. அதை அடுத்து அனைத்து விதமான வீதிகளிலும், அதன் அதிகபட்ச வேகத்தில் இருந்து 20 கி.மீ வேகத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.
130 கி.மீ அதிகபட்ச வேகம் உள்ள நெடுஞ்சாலை ஒன்றின் வேகம் 110 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 3.5 தொன்னிற்கும் அதிகமான எடையுடன் வாகனம் இருந்தால் அதற்கு அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ மட்டுமே எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை அறிவிக்கப்பட்ட இந்த வேகக்கட்டுப்பாடு நாளை ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.