DTT : அவதானம்! - தொலைக்காட்சிகளின் இலக்கங்கள் மாறுகின்றன..!!

13 தை 2025 திங்கள் 19:17 | பார்வைகள் : 3554
DTT இணைப்பு மூலம் தொலைக்காட்சி பார்பவர்களுக்கான அறிவித்தலாக - சனல்களின் இலக்கங்கள் மாற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’4’ நான்காம் இலக்கத்தில் ஒளிபரப்பாகுவதால் ”France 4” என பெயரிடப்பட்ட தொலைக்காட்சியினை விரைவில் பத்தாம் இலக்கத்துக்கு பின்னால் செல்ல உள்ளது. நான்காம் இலக்கத்தினை Canal + சனல் ஆக்கிரமிக்க உள்ளது.
BFMTV மற்றும் CNews தொலைக்காட்சிகள் இலக்கம் 15 மற்றும் 16 ஆம் இலக்கத்தில் இருந்து 13 மற்றும் 14 ஆம் இலக்கங்களுக்கு மாறுகிறது.
அதேவேளை, 26 ஆம் இலக்கத்தில் இயங்கும் LCI தொலைக்காட்சி 15 ஆம் இலக்கத்துக்கும், 27 ஆம் இலக்கத்தில் இயங்கும் franceinfo தொலைக்காட்சி 16 ஆம் இலக்கத்துக்கு மாற்றப்பட உள்ளது.
இவ்வருடம் ஜூன் 6 திகதி முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது.
