2024 ஆம் ஆண்டில் 47 தொன் கொக்கைன் பறிமுதல்.. உள்துறை அமைச்சர் தகவல்!!
14 தை 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 808
சென்ற ஆண்டில் நாட்டுக்குள் விற்பனைக்கு தயாராக இருந்த 47 தொன் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
”கடந்த 10 ஆண்டுகளில் நாம் மிக அதிகளவான பறிமுதல்களைச் செய்துள்ளோம்!” என உள்துறை அமைச்சர் Bruno Retailleau அறிவித்துள்ளார். பத்து நாட்களுக்கு முன்பாக Le Havre துறைமுகத்தில் வைத்து இரண்டு தொன் கொக்கைன் போதைப்பொருள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் Bruno Retailleau, அங்கு வைத்தே இதனை அறிவித்தார். 2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் 47 தொன் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும், 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 23 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் அதிகளவான கொக்கைன் போதைப்பொருள் Le Havre துறைமுகத்தில் வைத்தே பறிமுதல் செய்யப்படுவதாகவும், சென்ற ஆண்டு மட்டும் அங்கு 13 தொன் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.