Paristamil Navigation Paristamil advert login

அதிரடியாக வெளியான ‘ஜெயிலர் 2’ அறிவிப்பு!

அதிரடியாக வெளியான ‘ஜெயிலர் 2’ அறிவிப்பு!

14 தை 2025 செவ்வாய் 14:01 | பார்வைகள் : 327


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய ஹிட்டான படம் 'ஜெயிலர்'. அதன்பிறகு அவர் நடித்த 'வேட்டையன்' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே ஜெயிலர் பட கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக செய்தி வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று (ஜன.,14) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'ஜெயிலர் 2' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. எப்போதும் போல நெல்சன் படங்களுக்கான அறிவிப்பாக கோவாவில் அனிருத்தும் நெல்சனும் பேசுவது போன்று 'பன்' ஆகவும், அதேநேரத்தில் அதிரடியாகவும் இந்த அறிவிப்பு வீடியோ இடம்பெற்றுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்..கோவாவை பின்புலமாக கொண்டு இப்படம் உருவாவதாக தெரிகிறது. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவக்க திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் இந்த படத்திலும் வருவார்களா என்பது இனிமேல் தான் தெரியவரும். மற்றபடி, முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இதிலும் தொடர்வதாக கூறுகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்