சருமம் இளமையாக இருக்க வேண்டுமா?
14 தை 2025 செவ்வாய் 14:03 | பார்வைகள் : 541
அழகாக இருக்க சருமத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். இதற்காக நாம் அடிக்கடி பலவிதமான சரும பராமரிப்புகளை பின்பற்றுகிறோம். இன்னும் சிலரோ பல விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதே சமயம், வயது ஆக ஆக நம்முடைய அழகு குறைய ஆரம்பிக்கும். குறிப்பாக தோல் தளர்ந்து விடும், முகத்தில் சுருக்கங்கள் வர ஆரம்பிக்கும். இது இயற்கையானது தான். ஆனால், சிலர் தங்களுடைய வயதை மறைக்க சில முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் அதுவும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் 40 வயதிற்கு பிறகும் உங்களது சருமத்தை பளபளப்பாகவும், அழகாகவும் வைக்க நீங்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும்.
உங்களுக்கு தெரியுமா.. நாம் சாப்பிடும் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் நாம் சாப்பிடும் உணவு தான் நம்முடைய சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. எனவே நீங்கள் உங்களது சருமத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால், 40 வயதில் கூட 20 வயது போல் இருப்பீர்கள்.
பொதுவாக 40 வயதை கடந்த பெண்களின் சருமமானது மந்தமாகவும், தோலில் சுருக்கமும் இருக்கும். இதற்கு இன்சுலின் எதிர்ப்புதான் முக்கிய காரணம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். வயதாகும்போது இன்சுலின் எதிர்ப்பு வெளிப்படுவது வழக்கம். மேலும் இதனால் ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கும். இதனால் சருமத்தில் தொய்வு ஏற்படும் அதனால் தான் 40 வயதிற்கு பிறகு உணவில் சில மாற்றங்களை செய்வது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது 40 வயதிற்கு பிறகு எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும்? எதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட் உள்ள உணவுகளை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதனால் சருமத்தில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
- ஆல்கஹால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஆல்கஹால் சருமத்தில் வயதான மற்றும் நீரிழிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
- அடிக்கடி நீங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் சருமத்தில் பிரச்சனை ஏற்படும். எனவே அவற்றைத் தவிர்க்கவும்.
- 40 வயதிற்கு பிறகு ஆரோக்கியமான கொழுப்புள்ள உணவை சாப்பிட ஆரம்பியுங்கள். இதற்காக நீங்கள் நட்ஸ்கள் வெண்ணை போன்ற ஆரோக்கியமான கொழுப்புள்ள உணவை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
- புரதத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் சீரான முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதிகப்படியான புரதம் சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் சருமம் பாதிக்கப்படும்.
- 40 வயதிற்கு பிறகு காஃபின் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மிதமான அளவில் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக எடுத்துக் கொண்டால் சருமம் வறட்சிய அடையும்.
- 40 வயதிற்கு பின் மன அழுத்தத்தை தவிர்ப்பது நல்லது ஏனெனில் அதிகப்படியான மன அழுத்தம் சரும அருகில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
- உங்களது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 காய்கறிகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- 40 வயதிற்கு பிறகும் சருமம் ஆரோக்கியமாக இருக்க உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்.