Paristamil Navigation Paristamil advert login

Akha செயலியை அகற்றியது இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து சபை!!

Akha செயலியை அகற்றியது இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து சபை!!

14 தை 2025 செவ்வாய் 15:37 | பார்வைகள் : 3503


இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து துறைக்கு சொந்தமான 'Akha' எனும் தொலைபேசி செயலி, App Store மற்றும் Play Store இல் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

குறித்த செயலியானது, பொது போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மீது பொதுமக்கள் இலகுவான முறையில் புகார் அளிக்க ஏதுவாக உருவாக்கப்பட்டதாககும். ஆனால் குறித்த செயலி போலி செயற்பாடுகளுக்கும், இலகுவான மோசடிகளுக்கு துணை போவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதை அடுத்து அவை நீக்கப்படும் இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து துறை (Île-de-France Mobilité) நேற்று திங்கட்கிழமை அறிவித்தது. 

அதை அடுத்து, 24 மணிநேரங்களுக்குள்ளாகவே குறித்த செயலி iOS மற்றும் Android தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 

குறித்த செயலி பல்வேறு குற்றச்செயல்களுக்கு துணை போனதாக கண்டறியப்பட்டிருந்தது.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்