Paristamil Navigation Paristamil advert login

லெபனான் செல்லும் அரசுத்தலைவர் Emmanuel Macron. காரணம் என்ன?

லெபனான் செல்லும் அரசுத்தலைவர் Emmanuel Macron. காரணம் என்ன?

14 தை 2025 செவ்வாய் 18:38 | பார்வைகள் : 771


லெபனான் மீது இஸ்ரேல் கடந்த ஆண்டு திடீரென தாக்குதல்களை தொடங்கிய போது 'நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம்" என அன்று கூறிய பிரான்ஸ் அரசுத்தலைவர் Emmanuel Macron அவர்கள். இன்று லெபனானில் புதிய அரசுதலைவராக Joseph Aoun தெரிவாகியுள்ள நிலையில் அந்த நாட்டிற்கு விஜயம் செய்யும்
முதலாவது வெளிநாட்டு அரசுத் தலைவராக வரும் வெள்ளிக்கிழமை அங்கு செல்லவுள்ளார்.

இந்த விஜயம் குறித்து லெபனானில் புதிய அரசுத்தலைவர் Joseph Aoun அவர்கள் லெபனானுக்கான பிரெஞ்சு தூதுவரிடம் தெரிவிக்கையில் "பிரான்ஸ் மற்றும் லெபனான் உறவானது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளன, Emmanuel Macron அவர்களின் வருகை அதை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளும்" என தெரிவித்துள்ளார்.

"சீர்திருத்தங்களுக்கான பாதை, இறையாண்மை மற்றும் லெபனானின் செழிப்பு ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான பாதையைத் திறந்தது புதிய அரசுத்தலைவரின் தெரிவு " என ஏற்கனவே பிரான்ஸ் அரசுதலைவர் Emmanuel Macron தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்