Paristamil Navigation Paristamil advert login

3 அதிநவீன கடற்படை கப்பல்கள்; இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி!

3 அதிநவீன கடற்படை கப்பல்கள்; இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி!

15 தை 2025 புதன் 02:37 | பார்வைகள் : 614


இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., சூரத், ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., வாக்சீர் ஆகிய மூன்று கப்பல்களை, இன்று (ஜன., 15) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு இன்று பிரதமர் மோடி செல்கிறார். காலை 10 மணிக்கு மும்பை கடற்படை தளத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் பிரதமர் மோடி ஐ.என்.எஸ்., சூரத், ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., வாக்சீர் ஆகிய மூன்று கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மூன்று போர்க்கப்பல்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

P15B வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் நான்காவது மற்றும் இறுதிக் கப்பலான ஐ. என். எஸ்., சூரத், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வசதி கொண்ட கப்பலில் ஒன்றாகும்.இது 75 சதவீதம் உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டுள்ளது.

P17A ஸ்டெல்த் திட்டத்தின் முதல் கப்பலான ஐ.என்.எஸ்., நீலகிரி, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது அடுத்த தலைமுறை உள்நாட்டு போர் கப்பல்களில் முக்கியமான ஒன்றாக திகழும்.

P75 ஸ்கார்பீன் திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., வாக்சீர், நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. இது பிரான்சின் கடற்படைக் குழுவுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்