பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் ராக்கெட்!
17 தை 2025 வெள்ளி 15:34 | பார்வைகள் : 150
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினால் விண்வெளியில் செலுத்தப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் உயரே சென்றபோது திடீரென தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது வெடித்து சிதறியுள்ளது.
இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விண்கலம் வெடித்து சிதறி அதன் குப்பைகள் பூமியை நோக்கி விழும் காட்சியை விமானத்தில் இருந்தபடி சில பயணிகள் பதிவு செய்துள்ளனர். குறித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஸ்டார்ஷிப் விண்கலம் பறக்கத் தொடங்கிய 8.5 நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடன் உள்ள தொடர்பை இழந்ததாகவும், ஸ்டார்ஷிப் விண்கலம் நொறுங்கிவிட்டதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உறுதி செய்தது.
இது தொடர்பில் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "வெற்றி என்பது நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி" என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.