Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் நிதி பற்றாக்குறை குறையும்: உலக வங்கி அறிக்கையில் தகவல்

 இந்தியாவின் நிதி பற்றாக்குறை குறையும்: உலக வங்கி அறிக்கையில் தகவல்

18 தை 2025 சனி 03:01 | பார்வைகள் : 237


வலுவான வரி வருவாயின் காரணமாக, இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து குறையும் என்றும், அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளுக்கு 6.70 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்றும் உலக வங்கி தெரிவித்து உள்ளது.

உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:

வலுவான வரி வருவாய் காரணமாக, இனி வரும் காலங்களில் இந்தியாவின் நிதிப் பற்றாறக்குறை தொடர்ந்து குறைந்து கொண்டே வரும்.

அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு பொருளாதார வளர்ச்சி 6.70 சதவீதமாக இருக்கும். இந்தியாவின் சேவைகள் துறை நிலையான வளர்ச்சியை பதிவு செய்யக்கூடும்.

அதே நேரத்தில் சரக்கு கையாளுதல், உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, வரி வருவாய் சீர்திருத்தங்கள் ஆகிய அரசின் முன்னெடுப்புகளால், தயாரிப்பு துறை வளர்ச்சியும் வலுப்பெறக் கூடும்.

தொழிலாளர் சந்தையில் முன்னேற்றம், கடன் கிடைப்பது விரிவுபடுத்தப்பட்டுள்ளது மற்றும் குறைந்து வரும் பணவீக்கம் ஆகிய காரணத்தால், தனிநபர் நுகர்வு அதிகரிக்கும். அதிகரித்து வரும் தனியார் முதலீடு, நிறுவனங்களின் வலுவான இருப்புநிலை ஆகியவற்றால், முதலீட்டு வளர்ச்சி நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக தெற்காசியாவை பொறுத்தவரை, அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6.20 சதவீதமாக இருக்கும். இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.

அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.70 சதவீதமாக இருக்கும்