ஜனவரி 19 : புயல்.. வெள்ளம்.. பனிப்பொழிவு : 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
19 தை 2025 ஞாயிறு 06:13 | பார்வைகள் : 624
புயல் காற்று, வெள்ளம் மற்றும் பனிப்பொழிவு போன்ற சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு!
நாட்டின் வடமேற்கு பிராந்தியங்களில் இன்று ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை அதிகளவான பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. அங்கு 15 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Calvados,
Côtes-d'Armor,
Eure,
Ille-et-Vilaine,
Indre-et-Loire,
Loire-Atlantique,
Maine-et-Loire,
Manche,
Mayenne,
Morbihan,
Orne,
Sarthe,
Seine-Maritime,
Deux-Sèvres,
Vienne
ஆகிய மாவட்டங்களுக்கு இன்று நண்பகலின் பின்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
***
புயல்!!
அதேவேளை, கடல்கடந்த மாவட்டங்களான Haute-Corse மற்றும் Corse-du-Sud ஆகிய மாவட்டங்களுக்கு புயல் மற்றும் மழை காரணமாக 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என Météo France அறிவித்துள்ளது. அத்தோடு 150 தொடக்கம் 220 மி.மீ வரை மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.