தனியாளாக மீண்டும் சம்பவம் செய்த மேக்ஸ்வெல்! 32 பந்தில் 76 ரன் விளாசல்
19 தை 2025 ஞாயிறு 11:46 | பார்வைகள் : 125
பிக்பாஷ் லீக் போட்டியில் க்ளென் மேக்ஸ்வெல் 76 ஓட்டங்கள் விளாச, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 219 ஓட்டங்கள் குவித்தது.
BBL 2025 தொடரின் இன்றையப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிக்கேன் அணிகள் மோதின.
முதலில் துடுப்பாடிய மெல்போர்ன் அணியில் தாமஸ் 9 ஓட்டங்களிலும், ஹார்பர் 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த அணித்தலைவர் ஸ்டோய்னிஸ் 19 பந்துகளில் 32 ஓட்டங்கள் குவித்து வெளியேற வெப்ஸ்டர் அரைசதம் அடித்தார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் விளாசினார். அதன் பின்னர் களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) சிக்ஸர்களை பறக்கவிட அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
கடைசிவரை களத்தில் நின்ற மேக்ஸ்வெல் 32 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 219 ஓட்டங்கள் குவித்தது. ஓவென், எல்லிஸ், நிக்கில் மற்றும் பீன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.