அவதானம்! - பிரித்தானியாவில் இருந்து வரும் தொலைபேசி அழைப்பு.. மோசடியில் சிக்கவேண்டாம்!!
21 தை 2025 செவ்வாய் 13:10 | பார்வைகள் : 1556
பிரித்தானியாவில் இருந்து சேமிக்கப்படாத தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்புகள் பெறப்பட்டால், அது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் வசிக்கும் பலரது தொலைபேசி இலக்கங்களுக்கு (+44) என ஆரம்பிக்கும் பிரித்தானியாவின் இலக்கத்துடன் whatsapp அல்லது Telegram செயலிகளூடாக தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும், வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து, மோசடியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக WhatsApp செயலியூடாக இதுபோன்ற மோசடி தொலைபேசி அழைப்புகள் அதிகளவில் பதிவாகியுள்ளன எனவும், இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி அழைப்புகள் தென் கிழக்கு ஆசியாவில் இருந்து மேற்கொள்ளப்படுவதாகவும், பணம் செலுத்தியதன் பின்னர் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவோம் எனவும் கூறி பணத்தினை அபகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.