மீண்டும் Paris-Milan இணைப்பு ஏப்ரல் மாதத்தில் திரும்புகிறது.

21 தை 2025 செவ்வாய் 17:39 | பார்வைகள் : 5408
கடந்த 2023ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் Maurienne பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் கடும் பாதிப்பை சந்தித்த பிரான்ஸ் தலைநகர் Paris-யும் இத்தாலியின் Milan நகரையும் இணைக்கும் தொடரூந்து சேவை. இதனால் இரு பெரும் நகரங்களுக்கிடையிலான தொடரூந்து சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று (21/01) இத்தாலியின் வெளி நாடுளுக்கான தொடரூந்து சேவைகளை வழங்கும் Trenitalia சேவை எதிர் வரும் ஏப்ரல் 1-ம் திகதி முதல் Paris-Milan இணைப்பு வழமைக்கு திரும்பும் என அறிவித்துள்ளது. இந்த சேவைக்கான பயணச்சீட்டுகளை பயனாளிகள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இருந்து முன்பதிவு செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை SNCF நிறுவனம் தமது Ouigo சேவையின் Paris-Marseille தொடரூந்து சேவைகள் எதிர்வரும் ஜுன் 15-ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது என அறிவித்துள்ளது. இதன் மூலம் Paris-ல் இருந்து 3 மணிநேரம் 20 நிமிடங்களில் Lyon Saint-Exupéry, Avignon மற்றும் Aix-en-Provence வரை பயணிகள் பயணிக்க முடியும் இதற்கான முன்பதிவுகளும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1