சுமந்திரனுக்கு எதிராக விசாரணைகளை கோரும் சிறீதரன் எம்.பி!
22 தை 2025 புதன் 08:37 | பார்வைகள் : 364
விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றில் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீது தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் என பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் செய்வதிலிருந்து குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி தடை விதிக்க முற்பட்டிருந்தனர். அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும், அது நடைமுறையில் இல்லை என்றும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் வாதிட்டுள்ளார்.
எனினும் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அது அரசாங்கத்தின் முடிவு அல்ல என்று பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.