த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுகிறாரா?
25 தை 2025 சனி 14:47 | பார்வைகள் : 315
நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ’தளபதி 69’ படம் தான் கடைசி படம் என்றும் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விஜய்யை அடுத்து த்ரிஷாவும் சினிமாவில் இருந்து விலகப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் த்ரிஷாவுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது என்பதும் தற்போது தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் அஜித்துடன் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி, சிரஞ்சீவி உடன் விஸ்வாம்புரா’ கமல்ஹாசன் உடன் ’தக்லைஃப்’ சூர்யாவுடன் ’சூர்யா 45’ மற்றும் மோகன் லால் உடன் ’ராம்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் சில படங்களில் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப் போவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அரசியலில் குதிக்க போகிறார் என்று வதந்தி வெளியான நிலையில் தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகப் போகிறார் என்பதும் வதந்தியாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் இப்போது அவர் கையில் வைத்திருக்கும் படங்களை முடிக்கவே இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் எனவே இப்போதைக்கு அவர் சினிமாவில் இருந்து விலக வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து த்ரிஷா மற்றும் அவரது தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது