Paristamil Navigation Paristamil advert login

Instagramஐ போல இனி WhatsAppலும் பாடல்களை தேர்ந்தெடுத்து Status வைக்கலாம்

Instagramஐ போல இனி WhatsAppலும் பாடல்களை தேர்ந்தெடுத்து Status வைக்கலாம்

25 தை 2025 சனி 16:22 | பார்வைகள் : 187


இனி WhatsAppலும் நீங்கள் Instagramஐ போல இசையுடன் சேர்ந்த Status அப்டேட் செய்ய முடியும்.

இந்த வசதி விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

WAbetainfo-வின் அறிவிப்பின்படி அதிகாரப்பூர்வமாக இந்த வசதியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் பீட்டா யூசர்களுக்கு வழங்கப்படும். 

அந்த சோதனை முறையில் சில காலம் பயன்பாட்டிற்கு பிறகு இதில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து கலைந்த பிறகு வழக்கமான பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

உங்கள் WhatsAppல் வழக்கமாக Status வைப்பது போலவே Status பக்கத்திற்கு சென்று, Drawing Editior என்ற ஆப்ஷனுக்குச் சென்று, கீழ்பக்கம் உள்ள Music என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


இதில் தோன்றும் Menuவில் பிடித்த பாடல்கள் அல்லது இசை கலைஞர்களின் இசையை தேடி செலக்ட் செய்து கொள்ள முடியும். 

Instagramல் இருப்பது போலவே, இதிலும் நீங்கள் இசையை தேர்ந்தெடுக்க முடியும்.

தேர்வு செய்த பாடலில், விரும்பிய பகுதியை மட்டும் அதிகபட்சம் 15 நொடிகள் வரையிலான கால அளவிற்குள் தேர்வு செய்து WhatsAppல் Status வைக்க முடியும்.


Photoவிற்கு பதிலாக videoஐ Statusஆக வைத்து, அதனோடு மேற்கூறிய முறையில் இசையை சேர்த்து வைக்கலாம்.

மேலும், Instagramல் இருப்பதை போலவே உங்களது Statusஐ பார்க்கும் மற்றவர்களும், நீங்கள் சேர்த்துள்ள பாடலின் பெயரை கிளிக் செய்து, அந்த பாடலின் இசை கலைஞர் மற்றும் அதன் இதர விவரங்களை பார்க்க முடியும்.

இந்த வசதியானது ஏற்கனவே சில பீட்டா யூசர்களுக்கு பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.