Paristamil Navigation Paristamil advert login

நைஜீரியாவில்  குழந்தைகள் உட்பட 67 பேர் பலி...

நைஜீரியாவில்  குழந்தைகள் உட்பட 67 பேர் பலி...

23 மார்கழி 2024 திங்கள் 09:15 | பார்வைகள் : 3946


நைஜீரியாவில் மூன்று தனித்தனி கூட்ட நெரிசலில் 67 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நைஜீரியாவில் சில நாட்களுக்குள் நிகழ்ந்த தொடர்ச்சியான பயங்கரமான கூட்ட நெரிசல்களில் 67 பேர் உயிரிழந்து இருப்பது மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய சம்பவம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இலவச உணவு வழங்கல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்பட்டுள்ளது.

இதில் நான்கு குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை போல அனம்பரா மாநிலத்தின் ஓகிஜா நகரில், ஒரு தன்னார்வலர் ஏற்பாடு செய்த உணவு வழங்கல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 22 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் அபுஜாவில், உள்ளூர் தேவாலயம் ஒன்று நடத்திய இதே போன்ற நிகழ்ச்சியின் போது மேலும் பத்து பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் நைஜீரிய மக்கள் பொருளாதார வறுமையை எதிர்கொள்ளும் நிலையில், பொது மக்களுக்கான உதவித் திட்டங்கள் அதிகரித்து வருவதை இந்த துயர சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த வார தொடக்கத்தில், தென்மேற்கு நைஜீரியாவில் நடைபெற்ற விடுமுறை விழாவின் போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 35 குழந்தைகள் உயிரிழந்தனர்.

ஒயோ மாநிலத்தின் பாசோரூனில் உள்ள ஒரு பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது, அதற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்