இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை நிறைவு
23 மார்கழி 2024 திங்கள் 09:27 | பார்வைகள் : 353
ஹமாஸுடனான இஸ்ரேல் போரானது தீவிரமடைந்து காணப்படுகின்றது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
எனினும், இன்னும் சில முக்கிய விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலை உள்ளதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்டார் தலைநகர் தோஹாவில் இந்தப் பேச்சுவார்த்தையில்,
எகிப்தின் எல்லையில் தெற்கு காசாவில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதியான பிலடெல்பி நடைபாதையில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து இருப்பது தீர்க்கப்படாத விடயங்களில் ஒரு முக்கிய புள்ளியாகும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அத்துடன், காஸாவுடனான இஸ்ரேலின் எல்லையின் நீளத்தில் பல கிலோ மீட்டர் அகலத்தில் ஒரு மண்டலத்தை உருவாக்குவதும், அங்கு இஸ்ரேல் தனது இராணுவ இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுள் அடங்கும்.
இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், கீழ் காணும் மூன்று கட்ட போர் நிறுத்தம் சில நாட்களுக்குள் ஒப்புக் கொள்ளப்படலாம் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.