Paristamil Navigation Paristamil advert login

யாழில் எலிக் காய்ச்சலை தொடர்ந்து அச்சுறுத்தும் மற்றுமொரு பாதிப்பு

யாழில் எலிக் காய்ச்சலை தொடர்ந்து அச்சுறுத்தும் மற்றுமொரு பாதிப்பு

23 மார்கழி 2024 திங்கள் 10:23 | பார்வைகள் : 274


யாழ். மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, டெங்குத் தொற்று மிகையாக அதிகரித்து வருகின்றது.

இதன்படி, நவம்பர் மாதத்தில் 134 பேரும், டிசம்பர் மாதத்தில் 91 பேரும் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாகப் பேணுவது அவசியம் என தெரிவித்தார்.

அதேவேளை கடந்த நவம்பர் மாதம் இறுதியில் யாழில் பெய்த கடும் மழை காரணமாக டிசம்பர் மாத முற்பகுதியில் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டத்தில் , 08 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்றுள்ளதோடு ,டெங்கு தொற்று அதிகரித்து செல்வது குறிப்பிடத்தக்கது. 


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்