Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு மக்களின் பிடித்தமான சுற்றுலாத்தலமாக மாறியுள்ள இலங்கை!!

பிரெஞ்சு மக்களின் பிடித்தமான சுற்றுலாத்தலமாக மாறியுள்ள இலங்கை!!

23 மார்கழி 2024 திங்கள் 11:16 | பார்வைகள் : 4464


பிரெஞ்சு மக்களின் பிடித்தமான சுற்றுலாத்தலங்களாக ஆசிய நாடுகள் மாறிவருகின்றன. அதிலும் குறிப்பாக இலங்கை முன்னிலையில் உள்ளது.

பிரெஞ்சு சுற்றுலா ஏற்பாட்டு அமைப்பினர் வெளியிட்ட தகவல்களின் படி, வெளிநாட்டு சுற்றுலா செல்பவர்களின் முதல் தெரிவு ஆசிய நாடுகளாக இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக 44% சதவீதமானவர்கள் இலங்கையை தேர்ந்தெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தினை 17% சதவீதமானவர்களும், வியட்நாமை 12% சதவிதமானவர்களும் தேர்தெடுத்துள்ளனர்.

பண பெறுமதி மிகக்குறைந்த நாடுகளாக அவை இருப்பதாலும், இயற்கை வளங்கள் நிறைந்த சுற்றுலாத்தலங்களாக இருப்பதாலும் அவை பெரிதும் விரும்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்