Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவனின் விபரீத முடிவு

கொழும்பில் மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவனின் விபரீத முடிவு

23 மார்கழி 2024 திங்கள் 12:38 | பார்வைகள் : 287


மொரட்டுவை, இந்திபெத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

56 வயதுடைய கணவனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கணவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மதியம் வீட்டில் வைத்து தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திவிட்டு பின்னர் தனது உயிரை மாய்ததுக்கொண்டுள்ளார்.

காயமடைந்த மனைவி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த கணவன் இதற்கு முன்னரும், அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த அயல் வீட்டில் வசிக்கும் நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்