Paristamil Navigation Paristamil advert login

மிஸ் பிரான்ஸ் மீது நிறவெறி தாக்குதல்...!!

மிஸ் பிரான்ஸ் மீது நிறவெறி தாக்குதல்...!!

23 மார்கழி 2024 திங்கள் 15:31 | பார்வைகள் : 6342


2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீது நிறவெறி தாக்குதல்கள் பதிவாகிவருகின்றன.

Angélique Angarni-Filopon எனும் 34 வயதுடைய பெண், கடந்தவாரம் மிஸ் பிரான்ஸ் பட்டம் சூடினார். கறுப்பு அழகியான அவர் மீது இணையத்தில் அவதூறு கருத்துக்களும், நிறவெறி கருத்துக்களும் எழுதப்பட்டு வருகிறது.  அத்தோடு மிஸ். பிரான்ஸ் குழு மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இணையத்தில் அவதூறு பரப்புவோர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிஸ் பிரான்ஸ் குழு அறிவித்துள்ளது. 'இவ்வாற அவதூறுகளை மிஸ் பிரான்ஸ் குழு வன்மையாக கண்டிக்கிறது!' என அக்குழுவின் தலைவர் Frédéric Gilbert தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்