வெடிகுண்டு வைத்து பண இயந்திரம் தகர்ப்பு! - 470,000 யூரோக்கள் கொள்ளை!

23 மார்கழி 2024 திங்கள் 16:18 | பார்வைகள் : 4596
distributeur de billets எனப்படும் பண இயந்திரத்தை கொள்ளையர்கள் சிலர் வெடிகுண்டு வைத்து தகர்த்து கொள்ளையிட்டுள்ளனர்.
டிசம்பர் 23, இன்று திங்கட்கிழமை காலை இச்சம்பவம் Toulouse நகரில் இடம்பெற்றுள்ளது. நகர்ப்பகுதியில் உள்ள La Poste des Izards அருகே அமைக்கப்பட்டிருந்த குறித்த பண இயந்திரமே தகர்க்கப்பட்டுள்ளது. காலை 6.30 மணி அளவில் அங்கு பாரிய சத்தம் கேட்டதாகவும், பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
அவர்கள் சம்பவ இடத்தினை வந்தடையும் முன்னர், கொள்ளையர்கள் பணத்தைக் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பணம் கொள்ளையிடப்படுவதற்கு சற்று முன்னரே குறித்த பண இயந்திரத்தில் பணம் வைப்பிலிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 470,500 யூரோக்கள் மொத்தமாக கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.