Paristamil Navigation Paristamil advert login

டிசம்பர் 28 ஆம் திகதி முதல் ’சில’ ஐபோன்கள் விற்க தடை!!

டிசம்பர் 28 ஆம் திகதி முதல் ’சில’ ஐபோன்கள் விற்க தடை!!

23 மார்கழி 2024 திங்கள் 17:13 | பார்வைகள் : 1565


டிசம்பர் 28 ஆம் திகதி முதல் பிரான்சில் சில ஐபோன்கள் விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்த விதிமுறைகளுக்கு ஏதுவாக உள்ள இலத்திரனியல் சாதனங்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விற்பனை செய்ய முடியும். அதன்படி, தொலைபேசிகள், iPad, AirPods போன்ற கருவிகளில் ’Type C’ முறையில் தயாரிக்கப்பட்ட மின்னேற்றும் பகுதி இருக்கவேண்டும். அவை இல்லாத கருவிகள் இவ்வருடம் டிசம்பர் 28 ஆம் திகதியின் பின்னர் விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்த சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஐபோன் 14, 14 Plus, 14 Pro, 14 Pro Max போன்ற கருவிகளும் அதற்கு முற்பட்ட தொலைபேசிகளும், முதலாம் தலைமுறை AirPod 2 Pro போன்ற கருவிகளுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும்.

விற்பனை நிலையங்களில் குறித்த சாதனங்கள் விற்பனை செய்யப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடத்துக்கு முற்பட்ட ஐபோன் 14 தொலைபேசிக்கு இன்னும் ஆறு வருடங்களுக்கு மென்பொருள் மேம்படுத்த (iOS) முடியும் எனவும், ஆனால் அவை விற்பனை செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்