▶▶ இன்னும் சில நிமிடங்களில் “புதிய அமைச்சர்கள்” பட்டியல்!!
23 மார்கழி 2024 திங்கள் 17:20 | பார்வைகள் : 611
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பிரான்சுவா பெய்ருவின் அமைச்சர்கள் பட்டியல், இன்று திங்கட்கிழமை மாலை அறிவிக்கப்பட உள்ளது.
மாலை 6.30 மணி முதல் அமைச்சர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும் என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பட்டியலில் முன்னாள் பிரதமர்களான Elisabeth Borne, Manuel Valls போன்றோர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமராக பிரான்சுவா பெய்ரு அறிவிக்கப்பட்டு பத்து நாட்களின் பின்னர் பிரதமர்கள் பட்டியல் அறிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.