Paristamil Navigation Paristamil advert login

புதிய அமைச்சர்கள் அறிவிப்பு.... முழு விபரங்கள்!

புதிய அமைச்சர்கள் அறிவிப்பு.... முழு விபரங்கள்!

23 மார்கழி 2024 திங்கள் 18:36 | பார்வைகள் : 1156


பிரதமர் பிரான்சுவா பெய்ருவின் புதிய அமைச்சர்கள் பட்டியல் நீண்ட இழுபறியின் பின்னர் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்ரோனின் ஆட்சிக்காலத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் இருந்த பலர் இம்முறையும் தொடர்கின்றனர்.

▶ ஐரோப்பிய விவகார அமைச்சராக (ministre des Affaires européennes) Benjamin Haddad அறிவிக்கப்பட்டுள்ளார். 

▶ வீட்டுவசதிக்கான அமைச்சராக (ministre déléguée chargée du Logement) Valérie Létard அறிவிக்கப்பட்டுள்ளார்.

▶ ஊரகப் பொறுப்பு அமைச்சர் பிரதிநிதியாக (ministre déléguée chargée de la Ruralité) Françoise Gatel அறிவிக்கப்பட்டுள்ளார்.

▶ வேளாண்மை மற்றும் உணவு இறையாண்மை அமைச்சராக (ministre de l'Agriculture et de la Souveraineté alimentaire) Annie Genevard அறிவிக்கப்பட்டுள்ளார்.

▶ தொழிலாளர், சுகாதாரம், ஒற்றுமை மற்றும் குடும்பங்கள் அமைச்சராக (ministre du travail, de la Santé, des solidarités et des Familles) Catherine Vautrin அறிவிக்கப்பட்டுள்ளார்.

▶ ஐரோப்பா மற்றும் வெளியுறவு அமைச்சராக ( ministre de l'Europe et des affaires étrangères) Jean-Noël Barrot அறிவிக்கப்பட்டுள்ளார்.

▶ ஆயுதப்படை அமைச்சராக (ministre des Armées) தொடர்ந்தும் Sébastien Lecornu சேவைகளாற்றுவார். 

▶ கலாச்சார அமைச்சராக (ministre de la Culture) Rachida Dati அறிவிக்கப்பட்டுள்ளார்.

▶ உள்துறை அமைச்சு பதவியில் (ministre de l'Intérieur) மாற்றமில்லை. தற்போதை அமைச்சராக உள்ள Bruno Retailleau, தொடர்ந்தும் உள்துறை அமைச்சராக பணிபுரிவார்.

▶ பொருளாதார அமைச்சராக (ministre de l'Économi)  Éric Lombard அறிவிக்கப்பட்டுள்ளார்.

▶ நீதி அமைச்சராக (ministre de la Justice) Gérald Darmanin அறிவிக்கப்பட்டுள்ளார்.

▶ கடல்கடந்த நிர்வாகப்பிரிவு அமைச்சராக (ministre d'État chargé de l'Outre-mer) முன்னாள் பிரதமர் Manuel Valls அறிவிக்கப்பட்டுள்ளார்.

▶ தொழிலாளர், சுகாதாரம், ஒற்றுமை மற்றும் குடும்பங்கள் அமைச்சராக (ministre du travail, de la Santé, des solidarités et des Familles) Catherine Vautrin அறிவிக்கப்பட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்