Paristamil Navigation Paristamil advert login

பதவி விலகிய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய பிரதமர்!!

பதவி விலகிய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய பிரதமர்!!

24 மார்கழி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 5006


நேற்று புதிய அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக பதவி விலகிய அமைச்சர்களுக்கு பிரான்சுவா பெய்ரு கடிதம் ஒன்றை எழுதினார்.

அவர்களை மீண்டும் அமைச்சர்களாக இணைத்துக்கொள்ள முடியாமைக்கு வருந்துவதாக அக்கடிதத்தில் பிரான்சுவா பெய்ரு குறிப்பிட்டுள்ளார்.

"உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் படும் கஷ்டங்கள் உங்களில் யாருக்கும் தெரியாமல் இல்லை. உங்களில் அடுத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்காதவர்களுக்கு, உங்களது குணங்களும் அர்ப்பணிப்பும் நாட்டுக்கு பயனுள்ளதாக இருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று கூற விரும்புகிறேன்."

மக்ரோனின் ஆட்சியின் கீழ் பணியாற்றிய ஒரு சிலரே மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் முன்னாள் பிரதமர் Élisabeth Borne, முன்னாள் உள்துறை அமைச்சர் Gérald Darmanin போன்றோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்