ஒரே வாரத்தில் 260,000 பார்வையாளர்களை சந்தித்த நோர்து-டேம்!!
24 மார்கழி 2024 செவ்வாய் 07:07 | பார்வைகள் : 778
ஐந்து ஆண்டுகளின் பின்னர் திறக்கப்பட்ட நோர்து-டேம் தேவாலயத்தில் பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர். முதல் ஒருவாரத்தில் மட்டும் 260,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
நாள் ஒன்றுக்கு 30,000 தொடக்கம் 35,000 பேர் வரை வருகை தருவதாகவும், தேவாலயத்துக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து உள்ளே செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில் குறித்த தேவாலயம் தீ விபத்துக்குள்ளாகி, ஐந்து வருடங்கள் திருத்தப்பணிகள் இடம்பெற்றிருந்தன. அதன் பின்னர், இந்த டிசம்பர் 7 ஆம் திகதி மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டிருந்தது.