Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : gare Saint-Lazare நிலையத்துக்கு அருகே தீ விபத்து!!

பரிஸ் : gare Saint-Lazare நிலையத்துக்கு அருகே தீ விபத்து!!

24 மார்கழி 2024 செவ்வாய் 11:34 | பார்வைகள் : 5047


பரிசில் உள்ள gare Saint-Lazare தொடருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டது.

டிசம்பர் 24, இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் rue de la Pépinière வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் மேல் தளத்தில் தீ பரவியது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். ஒருமணிநேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

கட்டிடத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது தளங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

கட்டிடத்தில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்