Hauts-de-Seine : பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒருவர் மீட்பு!!
24 மார்கழி 2024 செவ்வாய் 13:36 | பார்வைகள் : 1060
பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில், 34 வயதுடைய ஒருவரை மருத்துவ உதவிக்குழுவினர் மீட்டுள்ளனர்.
Antony (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இன்று டிசம்பர் 23, செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. காலை 6.30 மணி அளவில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு நபர் ஒருவர் பல தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்காகி, இரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Georges-Pompidou European மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான நபரின் காதலியே காவல்துறையினரை அழைத்துள்ளார்.