அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி

24 மார்கழி 2024 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 5418
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் பிரச்சாரம் செய்தார்.
ஜோ பாய்டனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பில் கிளிண்டன் (Bill Clinton), 1993 மற்றும் 2001ஆம் ஆண்டு என இருமுறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார்.
வாஷிங்டனில் வசித்து வரும் பில் கிளிண்டனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறுபட்டுள்ளது.
மேலும், கிளிண்டனின் பணியாளர்கள் துணைத் தலைவர் வெளியிட்ட பதிவில்,
"மெட்ஸ்டார் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மருத்துவமனையில் பில் கிளிண்டன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1